எமது நோக்கு
மானிட அபிவிருத்தியின் பொருட்டு அபிமானமிக்க அரசாங்க சேவையை வழங்குதல்.
எமது பணி
அரசாங்க கொள்கைகளுக்கு ஏற்ப பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் மனித வளம்,பௌதீக வளம் மற்றும் மூலதன வளத்தை வினைத்திறன் மிக்கதாக உபயோகித்து அரசாங்க, அரச சார்பற்ற நிறுவனங்களை வினைத்திறன் மிக்க இணைப்புச் செயற்பாட்டுடன் பிரதேச அபிவிருத்தியின் முன்னோடியாகுவது எமது முடிவற்ற பணியாகும்.
நிறுவன விபரம்
பாரிய சமுத்திரத்தை சூழப்பட்ட இலங்கை தீவின் அரச நிருவாகம் மத்திய அரசாங்கத்தை பிரதானமாகக் கொண்டு மாவட்ட நிருவாக கட்டமைபின் கீழ் காணப்பட்டது. 1938 ஆம் வருடம் பிரதேச வருமான உத்தியோகத்தர் பிரிவாக கடமையாற்றப்பட்டதுடன் 1992 இன் 52 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பெறுபேராக இலங்கையின் விசாலமிக்க மாகாணமான வட மத்திய மாகாணத்தின் விசாலமிக்க மாவட்டமான அநுராதபுரத்தின் தெற்கு நுளைவாயல் அருகில் தலாவ பிரதேச செயலகப் பிரிவு அமையப்பெற்றுள்ளது.
தலாவ பிரதேச செயலகப் பிரிவு வடக்கில் மத்திய நுவரகம் பிராந்தியம் மற்றும் நாச்சியாதீவும், தெற்கில் கல்னவ மற்றும் தபுத்தேகவும், கிழக்கில் இபலோகம மற்றும் திரப்பைனையும் மேற்கில் தபுத்தேகம மற்றும் நொச்சியாகம ஆகிய பிரதேச செயலகங்கள் எல்லைகளாக உள்ளன
வண்டியினூடாக பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட காலத்தில் தவலம் ஆவ என்றவாறு மொழி பயன்பாட்டு காலம்தொடக்கம் தலாவ எனும் பெயரில் வழக்கத்தில் உள்ளதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னர் தலாகவாபீ நுவர என்றவாறும் அழைக்கப்பட்டுள்ளது. தலாவ நகரத்துக்கு 02 கி.மீட்டர் தூரத்தில் இன்று மகாவலி கிராமமாக இருக்கும் கம்பிரிகஸ்வெவ குடியிருப்பில் உள்ள எச்சங்கள் பிரகாரம் மகாவம்சம் போன்ற பண்டைய வரலாற்று சிறப்பு மிக்க ஏடுகளில் வரும் சுப்ரபுத்த ஹரன்திக என்ற தலைவர் தன்னிச்சையான பணிப்புரைகளை பரப்பியதாகவும் அபய தேரர் அவரை நல்வழிக்கு கொண்டுவந்ததாக சான்றுக் கதைகள் உள்ளன.
பண்டைய காலத்தில் சுபீட்சத்தை கொண்டு வந்த வரலாற்று சிறப்பு மிக்க யோத கால்வாய் தலாவ பிரிவின் ஊடாக செல்லுகின்றது. தேசபிதா டீ.எஸ்.சேனாநாயக்க அவர்களின் விவசாய குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்டத்தில் கூட பஹசலத் கடியாவ பழைய விவசாய குடியேற்றம் மற்றும் கடியாவ நீர்த் தேக்கம் அமைக்கப்பட்டிருப்பதும் தலாவ பிரிவிலாகும். தலாவ நாட்டின் மத்திய வீதியில் அமைந்துள்ளதால் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலும் வர்த்தக மத்திய நிலையமாக பிரசித்திபெற்றிருந்தது.
பிரித்தானிய இரண்டாவது எலிசபத் ராணியின் மாமியான எச்ஜின்கானி என்பவர் 1912 இல் கம்பளை சொனானா என்ற இடத்திலிருந்து தலாவைக்கு வருகை தந்து பிரீதி வீடு எனும் இல்லத்தை ஆரம்பித்துடன் தலாவை புத்துணர்வு பெற்றதுடன் அவர் 1932 இல் ஆரம்பித்த மிசனரி பாடசாலை இன்று தலாவ மகா வித்தியாலயமாக முன்னேற்றமடைந்துள்ளது.
கடியாவ குளம் மகாவலி கங்கையினால் போசிக்கப்பட்டதுடன், பதிய ஜய கங்கையினால் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் சிலதை தவிர தலாவ பிரதேசத்தில் வயல் நிலங்களுக்கு மகாவலி நீர் கிடைக்கின்றது. மகாவலி கால்வாயினால் மேலும் வயல் நிலங்கள் அபிவிருத்தி அடைவதுடன் நீர் தட்டுப்பாடு உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவு 7, 8 உள்ளன்.
தலாவ பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தர் பிரிவு 39 இல் 25 பிரிவுகள் கலாவெவ தொகுதிக்கும், 8 பிரிவுகள் மிஹிந்தலை தொகுதிக்கும் 06 பிரிவுகள் அநுராதபுரம் கிழக்கு தொகுதிக்கும் உரித்தாகின்றது. 68478 மக்கள் இப் பிரதேசத்தில் வசிக்கின்றனர். தலாவ மற்றும் எப்பாவல என இரண்டு பிரதான நகரம் காணப்படுவதுடன், தலாவ, எப்பாவல ,கடியாவ என 03 கமநல அபிவிருத்தி நிலையங்கள் காணப்படுவதுடன் தலாவ மற்றும் எப்பாவல ஆகிய இரண்டு பொலிஸ் நிலையங்கள் இப் பிரிவில் காணப்படுகிறது.
அநுராதபுர மாவட்டத்தின் தெற்கு திசையின் மேற்கில் அமைந்துள்ள தலாவ பிரதேச செயலகம் விசாலத்தில் 247.2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பினுல் பரந்துவிரிந்து காணப்படுகிறது. அகலாங்கு மற்றும் நெட்டாங்கின் படி வட அகலாங்கு 6-6.5 மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80.6 – 81.7 இடைப்பட்ட விதத்தில் அமையப்பெற்றுள்ளது.
ஒரு விதத்தில் ஒரு விதமாக இருக்க வேண்டும் ...
| பெயர் | முதல் | க்கு |
| திரு ஆர்.ஏ.ரணவீர | 1970 - ஜனவரி | 1970 - மார்ச் |
| திரு. WP வனிகரத்ன | 1970 | 1974 |
| திரு. சுனில் அபேசிங்க | 1974 | 1977 |
| திரு. எஸ்.டி.இ லாரன்ஸ் | 1978 - ஜூன் | 1978 - ஜூலை |
| திரு. எல்.பி. பிரேமபாலா | 1978 - ஜூலை | 1979 |
| திரு. எஸ்.டி.இ லாரன்ஸ் | 1980 | 1983 |
| திரு எச்.எம் கருணாரத்ன | 1983 | 1990 |
| திரு. ஏ.எஸ்.கலுராச்சி | 1990 | 1992 |
| திரு ஆர்.பி.ரத்வத்தே | 1992 | 1993 |
| திரு. ஹ்ரம் கருணாரத்ன | 1994 | 1997 |
| திரு.சரவீர மந்தரிரத்ன | 1997 | 2000 |
| திரு எச்.எம்.கே ஹெராத் | 2000 | 2004 |
| திரு பி.ஏ. சோமபாலா (நடிப்பு) | 2004 | 2006 |
| திரு ஆர்.பி.மஹிந்தரத்ன | 2006 | 2007 |
| திருமதி நளினி நானாயக்கார | 2007 | 2012 |
| திருமதி ரஞ்சனி பெரேரா (நடிப்பு) | 2012 | 2013 |
| திருமதி சந்தியா அபேசேகர | 2013 | 2015 |
| திரு. எச்.டி.என்.எஸ் பெர்னாண்டோ (நடிப்பு) | 2016 | 2016 |
| திரு என்.எச்.ஆர் நிஷாந்தா | 2016 | 2020 |
| திரு. ஆர்.எம்.ஜி.சேனரத்ன (நடிப்பு) | 2020 | 2021 |
| திரு அனுராதா திஸ்நாயக்க | 2021 |














